காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

வேலூர்=10/03/2022=12=28am


காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போக்குவரத்து விதிகளை மதிப்போம் விபத்துகளை தவிர்போம் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பேச்சு

பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே மற்றும் பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் ஆலாசனையின் அடிப்படையில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழப்புணர்வு பேரணி 08.03.2022 காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இப்பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி துவக்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது.. மாணவிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் இந்த விழிப்புணர்வு செய்திகளை தனது பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி நடந்தால் விபத்துகளை தவிர்கலாம். சாலை விதிகளை மதிப்போம் விபத்துகளை தவிர்போம் என்றர்.
வேலூர் மாநகர மாமன்ற உறுப்பினர் சித்ரா லோகநாதன், மற்றும் லோகநாதன் ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பள்ளி உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து வரவேற்று பேசினார்.
வேலூர் துணைத்தலைமை போக்குவரத்து காப்பாளர்கள் ஆர்.சீனிவாசன், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி துணைக்கிளை அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, டாக்டர் வீ.தீனபந்து, செயலாளர் சிவ வடிவு உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.புவனா, ஜெ.கௌசல்யா மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு சித்தூர் சாலை, வள்ளிமலை சாலை, குமரப்பநகர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி அவர்கள் துவக்கி வைத்த போது எடுத்த படம் உடன் தலைமையாசிரியை கோ.சரளா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவவடிவு ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ரெட்கிராஸ் துணைத்தலைவர் சீனிவாசன், விஜயகுமாரி, டாக்டர் தீனபந்து உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *