காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்
29/01/2022
வேலூர்=8.15.PM
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்காவலர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் . காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கம் வேலூர் மாநகராட்சி சுகாதார துறையுடன் இணைந்து காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமிற்கு பள்ளிக்குப்பம் நகர்புற சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடலட்சுமி தலைமை தாங்கினார்.
காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் உதவித் தலைமையாசிரியர் டி.என்.ஷோபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் காட்பாடி சரகத்தின் துணை கண்காணிப்பாளர் டி.கண்ணன், ஆய்வாளர் ஜெ.ஆனந்தன், உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், ஷாஜஹான் காவலர் அரவிந்தராஜ், பெண் காவலர்கள் சரஸ்வதி சுஜாதா உள்ளிட்டோர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.இந்த சிறப்பு முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை 100க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.