காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 681 பள்ளி மாணவிகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது


காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வருகை தரும் மாணவிகள் 100 சதவிகிதம் பேர் கொரோனா நோய் தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசி 681 மாணவிகள் செலுத்திக்கொண்டனர்.

பள்ளிகளில் கல்வி பயிலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 03.01.2022 அன்று காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி அவர்கள் தலைமையில் மாவட்டக்கல்வி அலுவலர் டி.சம்பத்து பள்ளித்தலைமையாசிரியர் கோ.சரளா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகள் 218 பேருக்கும் பதினோராம் வகுப்பில் 225 பேருக்கும், 10 வகுப்பு மாணவிகள் 238பேருக்கும் என மொத்தம் 681 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளிக்கு தொடர்ச்சியாக வருகை தரும் 100 சதவிகிதம் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வயது குறைவு காரணமாக ஒரு சில 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் மற்றும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை தாராத சில மாணவிகள் விடுபட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணியினை பள்ளி உதவித்தலைமையாசிரியை டி.என்.ஷோபா, க.திருமொழி, ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், ஆசிரிய ஆசிரியைகள் ஒருங்கிணைத்தனர்.

பள்ளிக்குப்பம் அரசு நகர்புற சுகாதார நிலையத்தின் மருத்துவர் வெங்கடலட்சுமி, தடுப்பூசி செலுத்தும் முகாம் மருத்துவர் மார்க்ஸ், செவிலியர்கள் சாராள், ஜான்சி, பிரியங்கா, ஹேமலதா, எழிலரசி உள்ளிட்டோர் கடந்த மூன்றாம் தேதி முதல் இன்று ஏழாம் தேதி வரை தடுப்பூசிகளை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *