காட்பாடி கழிஞ்சுரில் பொங்கல் சிறப்பு பரிசு கரும்புடன் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்
11/01/2022
வேலூர் மாநகரம் காட்பாடி கழிஞ்சுரில் பொங்கல் சிறப்பு பரிசு கரும்புடன் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும்.
இதனை தொடர்ந்து வேலூர் மாநகரம் காட்பாடிகழிஞ்சுரில் பொங்கல் சிறப்பு பரிசு கரும்புடன் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது