குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,983 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அத்துடன் ,11 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 ஆகவும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 825 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில், 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ததோடு, கடையும் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *