குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

08/01/2022

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்ய 500 பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த வேலையில் பணியமர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குவைத் நாட்டின் குவைத் கேட் பவுண்டேசன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்களுக்கு மாதஊதியம் ரூ.32 ஆயிரம் ஆகும். அனுபவம் இல்லாதவர்களுக்கு மாதஊதியம் ரூ.29 ஆயிரத்து 500 வழங்கப்படும். 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதரசலுகைகள் குவைத்நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும். ரத்து செய்யாத பட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும். குவைத் நாட்டின் கலாசார பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களுக்கு அவர்களின் தாய் மொழியில் வழங்கப்படும். பணிபுரியும் இடத்தில் பணியாளருக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தையோ அணுகலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்திலும், 044 -22505886, 044 -22500417 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் mchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *