கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர்.

குறிப்பாக விவசாயத்திற்காக பெறப்பட்ட கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். அதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவிபுரியும் விதமாக கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்காக வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை பெற்றவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் இவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக கண்டறியப்பட்டது. என்னவென்றால் போலி நகைகளை கொண்டு கடன் வாங்குவது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது, மேலும் வங்கி அதிகாரிகள் கூட மோசடிக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றது. அதனால் இதனை கட்டுப்படுத்த கூட்டுறவு வங்கிகளில் உயர் அதிகாரிகளால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அறிவித்தது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 20 லட்சம் பேர் 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்றுள்ளதால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *