கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை
கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என அரசு அறிவித்துள்ளது.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த என அரசு தெரிவித்தது.
அதே போல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊடரங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கும் போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் சந்தை வழக்கம் போல செயல்படும். சந்தைக்கு வருபவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.