சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

08/01/2022

 ஒவ்வொரு மாணவருக்கும்  ஐந்து  முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது 

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகள் வழங்கப்பட்டது.


  கொரோனா தொற்று பரவலால்  பள்ளிகள் திறக்காத நிலையில்,  சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக  வினியோகிக்கபட்டது வருகிறது.  இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா முட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,சத்துணவு அமைப்பாளர் பரமேஸ்வரி , சமையலர் தமிழரசி   ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்கள்களின்  பெற்றோர்  சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,சத்துணவு அமைப்பாளர் பரமேஸ்வரி , சமையலர் தமிழரசி ஆகியோர் செய்து இருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *