சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்வு.. ஒரே வருடத்தில் ரூ.305 உயர்வு.. சாமானிய மக்கள் கண்ணீர்..!
இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தைகள் அனைத்தும் இதை பெரிய அளவில் நம்பியுள்ளது. ஆனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் வகையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவது மிகவும் இயல்பான ஒன்று என்பது இது அனைவருக்கும் தெரியும். ஆயினும் இந்த காலக்கட்டத்தில் சமையல் சிலிண்டர் விலையை அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது