செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மாணவர்கள் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்
11/01/2022
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மாணவர்கள் ஊதியத்துடன் மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் தரவேண்டிய ஊக்கத்தொகையை கடந்த மூன்று மாதங்களாக தராமல் மருத்துவமனை நிர்வாகம் இழுத்தடித்துக் கொண்டு வந்துள்ளது.
தொடர்ந்து மூன்று மாதங்கள் ஊக்கத்தொகை அளிக்காத காரணத்தினால் முதுகலை மருத்துவர்கள் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது