சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் பயிற்சி வகுப்பு

29/01/2022

சென்னை=9.10.PM

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 27,812 பணியாளர்கள் தேர்தல் பணிக்காக தெரிவுசெய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (30.01.2022) குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
31.01.2022 அன்று நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பணி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணியாணை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறும் நபர்களின் மீது தேர்தல் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைவரும் மேற்கண்ட பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *