சேலம் காங்கிரஸ் கட்சியினர் கவர்னருக்கு மனு

11/01/2022

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்பொழுது போராட்டம் நடத்தி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மோடி திரும்பினார் இதற்கு பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரஸ் காரணம் என்று பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மூலமாக கவர்னருக்கு மனு அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறுகையில் பஞ்சாபில் நடைபெற்ற சம்பவத்திற்கு அம்மாநில ஆளும் காங்கிரஸ் எந்த ஒரு வகையிலும் காரணமல்ல பிரதமர் மோடியின் பாதுகாப்பு துறை அதிகாரிகளே காரணம் வேண்டுமென்றே அரசியல் உள் நோக்கத்திற்காக பஞ்சாபில் நடைபெறும் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை பாஜக உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். உடன்மாவட்ட பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி மற்றும் செவ்வை பகுதி பொறுப்பாளர் சாந்தமூர்த்தி சேலம் புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *