சேலம் ஜலகண்டபுரத்தில் பாஜக கொடிக்கம்பம் அகற்றி இதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
12/01/2022
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா அருகில் வீரபாண்டி சட்டமன்றம் சேலம் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஜலகண்டபுரத்தில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய செயல் அலுவலர் மற்றும் அராஜகமாக நடந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பதவி நீக்கம் கோரியும், பஞ்சாபில் பாரதப் பிரதமரை கொலை செய்ய சதி செய்த காங்கிரஸ் அரசை கலைக்க கோரியும்,மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட பொதுச் செயலாளர் பழனிசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆட்டையாம்பட்டி யார் என்கின்ற கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவகுமார் என்கின்ற குட்டி, அயோத்தி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஜக மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல், வேல்முருகன், பிரபாகரன் ,ராஜா, பட்டியலை அணித்தலைவர் பூபதி, மாவட்ட மகளிரணி செயலாளர் கலா, மற்றும் ஒன்றிய தலைவர்கள் சுரேஷ், சந்தோஷ், சரவணன், கந்தசாமி, ராஜேந்திரன், வெங்கடேஷ் பாபு, அணித் தலைவர்கள் வெங்கடாசலம், மோகன்ராஜ், சுரேந்தர் மீனவர் அணி மாநில செயலாளர் மதியழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்ராஜ் ,மாவட்ட துணைத்தலைவர் கோமதி, மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.