ஜியோ தொடங்கியபோது ரிலையன்ஸில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் இன்று மதிப்பு என்ன தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்திய கார்ப்பரேட் உலகின் கிட்டத்தட்ட ஒரு சூப்பர்ஸ்டார் போன்ற நிறுவனமாகும், பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து டெலிகம்யூனிகேஷன்ஸ் வரை பல தொழில்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈடுபட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் டெலிகாம் சேவை பிரிவான ஜியோவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கியது. இதன் மூலம் இந்திய டெலிகாம் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. குறுகிய ஆண்டுகளுக்குள் தேசிய அளவில் ஜியோ மிகப் பெரிய டெலிகாம் கம்பெனியாக உருவெடுத்தது.

செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு ஜியோ பங்கு விலை ரூ.539.36 ஆக இருந்தது. அப்போது ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் சுமார் 18 பங்குகளை வாங்கியிருக்கலாம். இப்போது அந்த பங்கின் விலை ரூ.2520 ஆக உள்ளது. எனவே உங்களிடம் இருக்கும் 18 பங்குகளின் விலை சுமார் ரூ.46,719.68 ஆக இருக்கும்.

கூடுதலாக உங்களுக்கு ஜியோ பைனான்சியல் சர்வீஸஸின் 18 பங்குகளும் கிடைத்திருக்கும். இப்போது தற்போதைய சந்தை விலை ஒரு பங்கு ரூ.250 என உள்ளது. 18 பங்குகளுக்கு ரூ.4400 கிடைத்திருக்கும். பரவலான 4ஜி நெட்வொர்க் கவரேஜ், சலுகை கட்டணம் ஆகியவற்றுடன் டெலிகாம் துறையில் ஜியோ காலடி வைத்தபோது பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பல பங்குகளின் விலையும் உயர்ந்தன. குறுகிய காலத்துக்குள்ளேயே ஜியோ மிகப்பெரிய டெலிகாம் ஆப்பரேட்டராக மாறிவிட்டது.

இப்போது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது பைனான்சியல் சர்வீஸ் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் ரூ.265இல் மும்பை பங்குச்சந்தையிலும் ரூ.262 தேசிய பங்குச் சந்தையிலும் தொடங்கியது. ஆனால் 5 சதவீதம் மதிப்பு குறைந்து ரூ.248.9க்கு குறைந்தது. இன்றும் 5 சதவீத சரிவில் தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *