ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்திற்கு சீல்
28/01/2022
ஜோலார்பேட்டை=8.37.PM
தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நகராட்சி பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் நாட்டறம்பள்ளி பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே செயல் பட்டு வரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகம் நேற்று மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல்வைத்தனர்.
ஜோலார்பேட்டை, நகராட்சி நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.