டிஎன்பிஎஸ்சி தேர்வு-எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே- பிடிஆர் பழனிவேல் ராஜன் உறுதி

ஆவின் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நிரப்பப்படும் என்றும் தமிழக சட்டசபையில் பேசிய பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பு குறித்த சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

இந்த சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. மசோதவை தாக்கல் செய்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் எல்லா அரசு பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டுமே. மாநகரம், பல்கலை கழகம் ஆகியவற்றிலும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இந்தநிலையில், 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதன்படி அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும் படியாக கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக 182 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *