தங்க நகைகளை மீட்ட தனிப்படை விளாத்திகுளம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்
11/01/2022
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில், கார்த்திகேயன் (40), த/பெ. கிருஷ்ணன், காமராஜர் நகர், விளாத்திகுளம் என்பவர் கடந்த 11.01.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு திறந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூபாய் 35,000/- பணமும் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காரத்திகேயன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது.
எட்டையாபுரம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் விவேக்ராஜா (30), த/பெ. சீனிவாசன், காமராஜர் நகர், விளாத்திகுளம் என்பதும், மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திகேயனும் மேற்படி எதிரி விவேக்ராஜாவும் பக்கத்து வீட்டுகாரர்கள் என்பதும், கார்த்திகேயன் வெளியே செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்திருக்கும் இடத்தை அறிந்து வைத்துள்ளதும், கடந்த 11.01.2021 அன்று கார்த்திகேயன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது வீட்டை சாவியால் திறந்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூபாய் 35,000/- பணத்தை திருடியதும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் மேற்படி எதிரி விவேக்ராஜா என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்..தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.