தஞ்சாவூர் மாவட்டத்தில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற
உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக வெற்றி
மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் இடத்தை தக்க வைத்தது திமுக

கும்பகோணம். அக்.13-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி மற்றும் இரு ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவியிடங்களை திமுக மீண்டும் கைப்பற்றி தக்க வைத்துக் கொண்டது.
தஞ்சாவூர் மாவட்டம் 16- வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் 1- வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் 24- வது வார்டு உறுப்பினர் பதவிகளில் காலியிடங்கள் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 9-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.
இதில் 16- வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட ராதிகா கோபிநாத் வெற்றி பெற்றார். அதே போல் ஒரத்தநாடு 1-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட கா.வெற்றிச்செல்வியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் 24- வது வார்டில் போட்டியிட்ட திமுக உறுப்பினர் என்.சசிக்குமாரும் வெற்றி பெற்றனர். இந்த மூன்று வார்டுகளிலும் ஏற்கெனவே திமுக வெற்றி பெற்றிருந்தது. அதே மீண்டும் தக்க வைத்தது.
வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள்:
திருவோணம் ஒன்றியம் அதம்பை ஊராட்சி மன்றத் தலைவராக ப.அபிராமியும், திருவையாறு ஒன்றியம் வளப்பகுடி ஊராட்சி மன்றத் தலைவராக நா.குளுந்தாயி, வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜி.அமுதா, திருவிடைமருதூர் ஒன்றியம் விளாங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக வேணுகோபாலன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற கிராம வார்டு உறுப்பினர்கள்:
பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி வார்டு எண் 1 -ல் ஏ.துரை, கும்பகோணம் ஒன்றியம் கடிச்சம்பாடி வார்டு எண் 6 -ல் என்.மனோகரன், சுந்தரபெருமாள்கோவில் வார்டு எண் -12 ல் புண்ணியமூர்த்தி, ஒரத்தநாடு ஒன்றியம் தென்னமநாடு வார்டு எண் 1-ல் ரா.தோழப்பன், பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டை வார்டு எண் 9- ல் காண்டீபன், பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் வார்டு எண் 2- ல் க.வீரப்பன், வாட்டாத்திக்கோட்டை வார்டு எண் 6-ல் அ.ரெத்தினம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகியநாயகிபுரம் வார்டு எண் 3-ல் சு.ராஜேந்திரன், மரக்காவலசை வார்டு எண் 4- ல் க.சரவணன், திருவிடைமருதூர் ஒன்றியம் இஞ்சிக்கொல்லை வார்டு எண் 1 -ல் ர.லதா, திருநீலக்குடி வார்டு எண் 4-ல் கே.முருகேசன், வண்டுவாஞ்சேரி வார்டு எண் 3- ல் கு.பார்வதி, வண்ணக்குடி வார்டு எண் 5 -ல் ரா.மாரிமுத்து, தஞ்சாவூர் ஒன்றியம் மாத்தூர் கிழக்கு வார்டு எண் 3-ல் ம.அந்தோணிசாமி, தோட்டக்காடு வார்டு எண் 1- ல் வீ.மனோ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *