தமிழகத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை – மதுரை ஐகோர்ட்டு
11/01/2022
வருகிற 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கவுள்ள சேவல் சண்டைக்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில் சேவல் சண்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வருகிற 25-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அதுவரை தமிழகம் முழுவதும் சேவல் சண்டைக்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.