தமிழக காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவல் துணை ஆணையர்: பதக்கம் வென்ற சென்னை போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

11/01/2022

1.தமிழக காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி
பெற்று பதக்கங்கள் பெற்ற கீழ்பாக்கம் துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினருக்கு
பாராட்டு.

கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரையில், செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில்
உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், தமிழ்நாடு மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும்
போட்டி–2022 நடைபெற்றது. இப்போட்டியில், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய
மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ
படையைச்சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில்
கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் கீழ்பாக்கம் காவல் மாவட்டம் துணை
ஆணையாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப அவர்கள் காவல் அதிகாரிகளுக்கன பிஸ்டல் ரக
துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணசாமி 25 அடி தூர
பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
K-2 அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரவீன்குமார் 40 அடி தூர இலக்கு மற்றும்
15 அடி துர இலக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு முறையே
வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றார். H-5
புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கணேஷ், (த.கா.36309) 300 மீட்டர்
Insas Rifle ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆயுதப்படைக் தலைமைக்காவலர் திரு.K.ஜீவராஜ் (தா.கா.24238) 300 மீட்டர் Insas Rifle ரக
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆயுதப்படை தலைமைக்காவலர்
திரு.சசிகுமார் (த.கா.43767) 50 அடி தூர இலக்கு, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில்
வெண்கலப்பதக்கம் வென்றார். ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. நந்தினி 50 அடி தூர
இலக்கு, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார். சென்னை
பெருநகர காவல் குழுவினர் துப்பாக்கி சுடும்போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள், 4
வெள்ளிப்பதக்கங்கள், 4 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் K-6 டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.E.இராஜேஸ்வரி அவர்கள்
தலைமையிலான ஆயுதப்படைக் தலைமைக் காவலர் திருமதி.பாரதி, (த.கா.43378)
E-1 மைலாப்பூர் தலைமைக்காவலர் திருமதி.கோமதி (27746), W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர்
காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திருமதி.நித்யகலா, (மு.நி.கா.47527) S-1 புனித தோமையர்
மலை காவல் நிலைய காவலர் செல்வி.செமிரா, (கா.49687) ஆயுதப்படைக்காவலர்கள் செல்வி.சிந்து
(கா.53633) செல்வி.சந்தியா, (55084) செல்வி. சிவரஞ்சனி (56360) ஆகியோர் அடங்கிய பெண்கள்
அணியினர் ஒட்டு மொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து கேடயம்
பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2.புளியந்தோப்பு பகுதியில் குற்றம் செய்யும் நோக்குடன் அரிவாள்களுடன் சுற்றி திரிந்த
வழக்கில் சரித்திரப்பதிவேடு குற்றவாளி உட்பட 3 நபர்கள் கைது. 2 அரிவாள்கள் மற்றும் 2
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் திரு.வேலு தலைமைக்காவலர் திரு.குமரேசன்,
(த.கா.33005), காவலர் திரு.மருதுபாண்டி (கா.எண்.42134) ஆகியோர் அடங்கிய காவல்
குழுவினருக்கு கடந்த 26.11.2022 அன்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புளியந்தோப்பு,
அம்பேத்கர் காலேஜ் ரோடு, பிரைட்டன் ரோடு சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்த போது,
அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 2 நபர்களை பிடித்து விசாரணை
செய்து போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை
சோதனை செய்து போது, குற்றம் செய்யும் நோக்குடன் அரிவாள்கள் மறைத்து வைத்திருந்தது
தெரியவந்தது. அதன்பேரில் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து
விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள்1.ஆனந்தபாபு (எ) ஆனந்த், வ/28,
த/பெ.சுந்தர், எண்.16, 2வது தெரு, மயிலாப்பூர், சென்னை 2.விஜயகுமார் (எ) கறுக்கா விஜி, வ/36,
த/பெ.கனகராஜ், எண்.31/18, வெங்கடேசபுரம், நியூகாலனி, 5வது தெரு, புளியந்தோப்பு என்பது
தெரியவந்தது. விசாரணையில் மேற்படி நபர்கள் அளித்த தகவலின் பேரில் 3.சுரேஷ் (எ) கறுக்கா
சுரேஷ், 49, த/பெ.விஜயகுமார், எண்.2/5, சாஸ்திரி நகர், 13 வது தெரு, புளியந்தோப்பு மற்றும்
மேற்படி வழக்கில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 அரிவாள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் (எ) கறுக்கா சுரேஷ் P-1 புளியந்தோப்பு காவல்
நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை வழக்கு, 4
கொலை முயற்சி வழக்குகள் உட்பட 50 குற்றவழக்குகள் உள்ளதும், இவர் ஏற்கனவே 6 முறை
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
3.கிண்டி பகுதியில் ரோந்து பணியின் போது, வேளச்சேரி பகுதியில் உள்ள துணிக்கடையின்
பூட்டை உடைத்து துணிகள் திருடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர். குற்றவாளியிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புதிய துணிகள் மற்றும் 1
ஆட்டோ பறிமுதல்.
J—3 கிண்டி காவல் நிலைய ஜிப்சி ரோந்து வாகன பொறுப்பு தலைமைக்காவலர்
திரு.வீரராகவன், (த.கா.35244), வாகன ஓட்டுநர்/ ஆயுதப்படை காவலர் திரு.வெங்கோபராவ்
(கா.55198) ஆகியோர் கடந்த 02.01.2022 அன்று அதிகாலை 12.30 மணியளவில் கிண்டி, வேளச்சேரி
மெயின் ரோடு, அண்ணா கார்டன் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு
சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்து போது,
முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை
மேற்கொண்டதில் மேற்படி நபரின் பெயர் கோகுல், வ/20, த/பெ.சங்கர், அன்பில் தர்மலிங்கம் தெரு,
வேளச்சேரி என்பதும், இவர் சம்பவத்தன்று வேளச்சேரி பகுதியில் உள்ள துணிக்கடையின் பூட்டை
உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியதையும்
ஒப்புக்கொண்டார். அதன் பேரில் குற்றவாளி கோகுலை J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர்.

J-7 வேளச்சேரி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து கோகுல், வ/20, த/பெ.சங்கர்
என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புதிய
துணிகள் மற்றும் 1 திருட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது
செய்யப்பட்ட கோகுல் மீது கொலை, கொலைமுயற்சி, மற்றும் ஆட்டோ திருட்டு உட்பட 6 வழக்குகள்
உள்ளது தெரியவந்தது.

4.வண்ணாரப்பேட்டை பகுதியில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக
விற்பனை செய்த நபரை பெண் காவலர் பிடித்து ஒப்படைத்ததின்பேரில், இக்கும்பலைச்
சேர்ந்த மொத்தம் 9 நபர்கள் கைது. 880 டைடோல் மாத்திரைகள், 2 சிரஞ்சிகள் மற்றும் 3
செல்போன்கள் பறிமுதல்.

சென்னை பெருநகர காவல், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவைச்
சேர்ந்த முதல்நிலை பெண் காவலர் திருமதி.P.சத்யா, (பெ.மு.நி.கா.43258) என்பவர் கடந்த 08.12.2021
அன்று இரவு சுமார் 07.00 மணியளவில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி வந்த நபரை நிறுத்தி
விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர்
வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் மாத்திரைகள் மற்றும் ஊசிபோடும் சிரஞ்சிகள்
இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், அந்த நபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில்,
காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் ஜெகன்
(எ) ஜெகநாதன், வ/21, த/பெ.சேகர், அண்ணாநகர் 2வது தெரு, ராணிப்பேட்டை மாவட்டம் என்பதும்,
டைடோல் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யும் கும்பலைச்
சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அதன்பேரில், 1.ஜெகன் (எ) ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, அவர் கொடுத்த
தகவலின்பேரில், அந்த கும்பலைச் சேர்ந்த 2.சதிஷ் சாய் (எ) சாய், வ/25 த/பெ.மாதேஷ், ஒண்டிவீரன்
கோயில் தெரு, கொருக்குப்பேட்டை, 3.கணேஷ் (எ) பப்லு, வ/21, த/பெ.துரைபாபு, ஒண்டிவீரன்
கோயில் தெரு, கொருக்குப்பேட்டை, 4.ஐயப்பன், வ/19, த/பெ.மாசிலாமணி, ரங்கநாதபுரம்,
கொருக்குப்பேட்டை, 5.கௌதம், வ/20, த/பெ.சந்திரன், மண்ணப்பன் தெரு, கொருக்குப்பேட்டை,
6.பாலாஜி, வ/25, மணிமுருகன், நைனியப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, 7.பிரபு, வ/27,
த/பெ.கணபதி, 8.அர்ஷா, வ/31, த/பெ.மனோகரன், நெல்லூர், ஆந்திரமாநிலம், 9.விஜய், வ/26,
த/பெ.ராமானுஜ மெய்யுலு, நெல்லூர், ஆந்திர மாநிலம் ஆகிய 9 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 380 டைடோல் மாத்திரைகள், 500 நைட்ரோவிட் மாத்திரைகள் என மொத்தம் 880
உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற
கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப, காவல் அதிகாரிகள்
மற்றும் ஆளிநர்கள், மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்
ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (10.01.2022) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்
வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *