திருப்பத்தூர் இந்தியன் வங்கி நடத்தும் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம்..!
இந்தியன் வங்கி நடத்தும் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம்..!

திருப்பத்தூர் மாவட்ட வங்கிகளும் இனைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி) நடத்தும் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மற்றும் அதனைச் சார்ந்த அரசு துறைகள் இணைந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ் நல்லதம்பி வில்வநாதன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் ஆகியோரின் தலைமையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு என பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
மண்டல மேலாளர் ஸ்ரீ கிருஷ்ணராஜ், துணை மண்டல மேலாளர் மற்றும் ஸ்ரீமதி சுசீலா பார்த்தசாரதி,இந்தியன் வங்கி, எஸ்பிஐ, கனரா வங்கி, ஐஓபி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் நப்ராட் உதவி பொது மேலாளர், மண்டல மற்றும் மண்டல மேலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வங்கியின் வாடிக்கையாளர்கள் விவசாயம், எம்எஸ்எம்இ, வீட்டுவசதி, வாகனம், தனிநபர் கடன், கல்விக் கடன் மற்றும் சுய உதவிக் கடன் என மொத்தம் 3199 பயனாளிகளுக்கு அனைத்து வங்கிகளும்
சேர்த்து 99.03 கோடி கடனுதவி பெற்றனர்.