திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 93 ஆயிரம் வாக்காளர்கள். பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

திருப்பத்தூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டார். இதன்படி 9 லட்சத்து 93,050 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டார்.

வாணியம்பாடி வாக்குச்சாவடிகள்-259, மொத்த வாக்காளர்கள்- 2,56,795. ஆண்கள்- 1,26,000, பெண்கள்- 1,30,749, இதர வாக்காளர்கள்- 46.

ஆம்பூர் வாக்குச்சவடிகள்- 245, மொத்த வாக்காளர்கள்- 2,44,707. ஆண்கள்- 1,18,346, பெண்கள்- 1,26,330, இதர வாக்காளர்கள்- 31.

ஜோலார்பேட்டை வாக்குச்சாவடிகள்- 267, மொத்த வாக்காளர்கள்- 2,46,396, ஆண்கள்- 1,21,713, பெண்கள்- 1,24,675, இதர வாக்காளர்கள்- 8.

திருப்பத்தூர் வாக்குச்சாவடிகள்- 267, மொத்த வாக்காளர்கள்- 2,45,152, ஆண்கள்- 1,21,597, பெண்கள்- 1,23,531, இதர வாக்காளர்கள்- 24. 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,038 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

மொத்த வாக்காளர்கள் 9,93,050. இதில் ஆண்கள்- 4,87,656, பெண்கள்- 5,05,285, இதர வாக்காளர்கள்- 109. தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களின்படி 21,324 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், உதவி கலெக்டர் (பொறுப்பு) பானு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *