திருப்பத்தூர் மாவட்டம் அருகே பதுக்கி வைத்திருந்த 1350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
12/03/2022=09=40am
திருப்பத்தூர் மாவட்டம் பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் மந்திரி வட்டம் கூத்தாண்டகுப்பம் கிராமத்தில்ராஜா வீதி இ சேவை மையம் பின்புறத்தில் உள்ள ராஜேஸ்வரி வயது நாற்பத்தி மூன்று கணவர் பெயர் ராஜாமணி என்பவர் வீட்டில் ஒரு கொட்டாயில் கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தனர்.
குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்தனர் உணவுத் துறை ஆய்வாளர் சதீஷ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது