திருவண்ணாமலையில் 2 டன் தரமற்ற வெல்லம் கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு விநியோகிக்க தடை

11/01/2022

திருவண்ணாமலையில் 2 டன் தரமற்ற வெல்லம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பொதுமக்களுக்கு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1627 கூட்டுறவு நியாயவிலை கடைகள் மூலம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 அரிசி பெரும் குடும்ப அட் டைதாரர்களுக்கு கடந்த 4ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்புகளில் வழங்கப்படும் எண்ணெய், வெல்லம் உள்ளிட்ட சில பொருட்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.

இந்த ஆய்வில் சுமார் 2.5 டன் தரமற்ற வெல்லம் பொது மக்களுக்கு வழங்கப்பட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங் கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் தரமற்ற வெல்லத்தை பொதுமக்களுக்கு வழங்க தடை விதித்தார். இதுதவிர பொருட்களில் தரம் குறை வாக இருந்தாலோ அல்லது தரமற்ற பொருட்கள் விநியோ கம் செய்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும்

இருந்தால் அவைற்றை பெற்றுக்கொண்டு மாற்று பொருட்களை அளிக்கவும். அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும். தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட் சித்தலைவர் பா.முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறு கையில், பொது மக்களிடம் இருந்து வந்த புகாரினைய டுத்து தான் நேரில் ஆய்வு செய்ததாகவும், பொருட்கள் வழங்கப்படும் பைகள் இல் லாத நிலையில் பொருட்கள் வழங்கும் பணிகளில் சிறிது தொய்வு இருந்ததாகவும், தற்போது அவை சரிசெய் யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.5 டன் வெல்லம் தரமற்று இருந்ததாகவும், அவற்றை அனுப்பிய நிறுவனமே அந்த வெல்லத்தை பெற்றுக் கொண்டு மாற்று வெல்லத் தினை அளித்துள்ளதாகவும்
தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *