திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 318 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது
28/01/2022
திருவள்ளூர் =7.56.PM
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியும், திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகளும், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், திருமழிசை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சிகளும் உள்ளன.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகள், திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள், திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள், பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகள், பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள், திருநின்றவூர் நகராட்சியில் 27 வார்டுகள் என மாவட்டத்தில் மொத்தம் 141 வார்டுகள் உள்ளன. ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, திருமழிசை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும், மீஞ்சூர், நாரவாரிகுப்பம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் என மொத்தம் 129 வார்டுகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 318 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 830 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 170 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 313 பெண் வாக்காளர்களும், 158 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 45 ஆயிரத்து 634 வாக்காளர்கள் உள்ளனர்.