தூத்துக்குடியில் ஒமிக்ரான் தொற்று பரவலை எதிர்கொள்ள 900 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள்
08/01/2022
தூத்துக்குடியில் ஒமிக்ரான் தொற்று பரவலை எதிர்கொள்ள 900 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
கனிமொழி எம்பி தகவல்!பரவி வரும் ஒமிக்ரான் தொற்று பரவலை எதிர்கொள்ளும் வகையில், தூத்துக்குடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும், 900 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக , தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகள் மற்றும் வார்டுகளை ஆய்வு செய்த பின் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மருத்துவமனை முதல்வர் நேரு மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.