தூத்துக்குடியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி

11/01/2022

தமிழகத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பின்னர் உருமாறி ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது

இதனை தடுக்கும் வகையில் முன்களப்பணியாளர்கள் 2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

மேலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை எந்த வகை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதோ அந்த வகை தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் கருதபடுகிறது

அதனடிப்படையில் சென்னையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தூத்துக்குடியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வைத்து அரசு மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மரு.பொற்செல்வன், அரசு உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, துணை முதல்வர் கலைவாணி மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *