தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் தோட்ட உரிமையாளர்கள் நீர் ஓடைகளை ஆக்கிரமைப்பு
29/01/2022
தேனி=8.34.PM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன் பட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் கோம்பை ரோடு கீழ் பகுதியில் அருகே செல்லும் நீர் வழி தடங்களை சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் நீர் ஓடைகளை ஆக்கிரமைப்பு செய்து ஓடையை மறித்து பாதை அமைத்துள்ளனர். இதனால் அனுமந்தன் பட்டியில் இருந்து கோம்பை ரோடு வரை செல்லும் தார்ச்சாலை மழைக்காலங்களில் மழை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வெள்ள நீர் செல்ல வழியின்றி சாலைகள் வழியாக செல்கின்றன. இதனால் தார்ச்சாலைகள் முழுவதும் அறிப்பு ஏற்பட்டு சாலை மிகவும் சேதமடைந்து வருகின்றன இந்திலையில் இந்த சாலையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய பணிகளுக்கு செல்ல முடியாமல் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ள எனவே நீர் வழித்தடங்களை மறித்து பாதை அமைத்த தனியார் தோட்ட உரிலையாளர்கள் மீது தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கும், பொதுப்பணித் துறை மற்றும் அனுமந்தன் பட்டி பேருர்ராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.