நகர்புற உள்ளாட்சி தேர்தல் – விழுப்புரம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல்

28/01/2022

விழுப்புரம்=8.07.PM

தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு விழுப்புரம் தாசில்தார் தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்து பூட்டினர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால், விழுப்புரம், கோட்டக்குப்பம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளிலும், அனந்தபுரம், செஞ்சி, மரக்காணம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு விழுப்புரம் தாசில்தார் ஆனந்த குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்து பூட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *