நீலகிரி மாவட்டத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தாசில்தார் கைது
31/01/2022
நீலகிரி=7.11.AM
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு அலுவலர்கள், போலீசார் இடம்பெற்று உள்ளனர்.
ஊட்டி அருகே அதிகரட்டி பேரூராட்சியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையில் பணிபுரிந்த பெண் போலீசார் ஒருவர் தனக்கு துணை தாசில்தார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரியும் பாபு (வயது 35) என்பவர் பறக்கும் படையில் நியமிக்கப்பட்டு உள்ளதும், அவர் பணியின் போது பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் பாபு மீது பாலியல் தொல்லை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.