நெமிலி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ராணிப்பேட்டை =10/03/2022=10=25pm
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய குழுதலைவருமான பெ.வடிவேலு திறந்து வைத்தார்.
இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
நேரடி வசூல் கொள்முதல் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.