பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூர்=12/03/2022=0948am

உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஐனதா கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது..

இந்த வெற்றி வரலாறு காணாத வெற்றி. என்றும் இனி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாக் கட்சியின் வெற்றி அதிகரிக்கும். மிக விரைவில் தமிழகத்திலும் பா.ஜ‌க ஆட்சியில் அமரும் என்றும் கோசம் மிட்டு
உத்திரபிரதேஷம், மணிப்பூர்.கோவா மற்றும் உத்திர காண்ட் ஆகிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைவர் .செல்வராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது இதில் மூர்த்தி ஹரிஸ் பிரியன் ,தினேஷ், வாசு ராமச்சந்திரன் மற்றும் மாநில.மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரம்பலூர் 4 ரோடு முதல் பழைய பேருந்து நிலையம் வரை சுமார் ஐந்து இடங்களில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்று வெற்றியை கொண்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *