பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகளின் ஊரக வேளாண் பணிஅனுபவ தொடக்க விழா
பெரம்பலூர்: 09/03/2022=9.53.pm
பெரம்பலூர் மாவட்டம், தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் வேளாண் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சியின் துவக்க விழா
இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் சுமார் ஒரு வார காலமாக பெரம்பலூர் ரோவர் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின்கீழ் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் சமுக வரைபடம், வள வரைபடம், இயக்க வரைபடம், மற்றும் கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் அத்தியாவசிய வசதிகள் மற்றும் வருமான, செலவு ஆகியவற்றை மாணவிகள் வரைந்தும் மக்களை வரைய செய்தும் மக்களுடன் கலந்துரையாடி விளக்கினார். இதில் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டர்