பெரும்பாலான மக்கள் பணத்தை சேமிக்கும் 2 திட்டங்கள்.. வட்டி மட்டுமே இவ்வளவு!

பொதுவாகவே மக்கள் கையில் இருக்கும் பணத்தை சேவிங்ஸ் அக்கவுண்டில் போடுவார்கள் அப்படி இல்லையென்றால் குறுகிய கால முதலீடான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர்பார்கள். இந்த 2 சேமிப்பு திட்டங்களை தான் மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி, தனியார் ஊழியர்கள், மூத்த குடிமக்கள், சுய தொழில் செய்பவர்கள் என பலரும் அதிகம் பயன்படுத்துகின்றனர். முக்கியமான இந்த திட்டத்தில் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி தர்றாங்கன்னு தெரிஞ்சிக்க வேணாமா? வாங்க விவரமாக பார்க்கலாம்.

முன்னணி வங்கிகளான எச்டிஎப்சி வங்கி சேமிப்பு கணக்குக்கு 3.50%,ஐசிஐசிஐ வங்கி 3.5% – 4.00%, ஆக்சிஸ் வங்கி 3.50% , கோட்டக் மஹிந்திரா வங்கி 4.00% – 6.00%, யெஸ் வங்கி 5.00% – 6.25%, பந்தன் வங்கி 4.00% – 7.00%, லட்சுமி விலாஸ் வங்கி : 3.50% – 6.50%, இண்டஸ் இண்ட் வங்கி 4.00% – 6.00%, ஆர்பிஎல் வங்கி 5.00% – 6.75% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதத்தில் அவ்வப்போது மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் ஆனால் பெரியளவில் வட்டி விகிதங்கள் மாற வாய்ப்பு இல்லை.

அடுத்தது, பிக்சட் டெபாசிட் திட்டம். முன்னணி வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி 2.90% – 5.40%, ஐசிஐசிஐ வங்கி 2.50% – 5.50%, எச்டிஎப்சி வங்கி 2.50% – 5.50%, பஞ்சாப் நேஷனல் வங்கி : 2.90% – 5.25%, கனரா வங்கி : 2.90% – 5.25%, ஆக்சிஸ் வங்கி : 2.50% – 5.75% ,பேங்க் ஆஃப் பரோடா 2.80% – 5.25%, பேங்க் ஆஃப் இந்தியா 2.85% – 5.05%, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 3.00% – 5.30% வட்டி விகிதங்களை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்குகிறது. இதற்கு முன்பு இதைவிட அதிக வட்டி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் தொடர்ந்து பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன.

இந்த நேரத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை விட சிறு வங்கிகள் அதிக வட்டிகளை கொடுக்கின்றன என்பதை பலரும் கவனிக்க மறந்துவிடுகின்றனர். அந்த வகையில் நல்ல வட்டி தரும் சில வங்கிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *