பையுடன் வந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம் – தமிழக அரசு
08/01/2022
சில இடங்களில் பை தயாராக இல்லாததால் பொதுமக்கள் பை கொண்டுவந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 45.1% அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில இடங்களில் பை தயாராக இல்லாததால் பொதுமக்கள் பை கொண்டுவந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பைகள் இல்லாமல் பரிசுத்தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவோர் பின்னர் பொருட்கள் வாங்கும்போது பை பெற்றுக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பரிசுத்தொகுப்புக்கான பை தயாரான உடன் ரேஷனில் மற்ற பொருட்களை வாங்கும்போது அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் பைகள் தயாரிக்கும் பணியில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.