பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
08/01/2022
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 1-ந் தேதி அடிப்படையில் 18 வயது பூர்த்தியான தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். மேலும் பெயர் நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அப்போது தாசில்தார்கள் அரசகுமார், பானுமதி, சசிரேகா மற்றும் தேர்தல் பிரிவு தனி தாசில்தார்கள் உடனிருந்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- இறுதி வாக்காளர் பட்டியலின்படி பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 77 பேரும், பெண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 79 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 43 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை சட்டமன்ற தொகுதியில்(தனி) ஆண்கள் 98 ஆயிரத்து 727 பேரும், பெண்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 827 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 21 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 575 வாக்காளர்களும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 3 பேரும், பெண்கள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 375 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 42 பேரும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 420 வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பம் நேரடியாக வழங்கலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பழுதடைந்த வாக்குச்சாவடிகள் குறித்து தெரியப்படுத்தலாம். மேலும் வாக்குச்சாவடி தூரத்தில் இருந்தால், அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தி கொடுப்பது, வார்டு மறு வரையறை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் தெரிவிக்ககலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.