முகப்பேர்  வேலம்மாள் பள்ளியில்  சமூக ஊடகங்களின் கவனச்சிதறல்களைத் திறம்படக் கையாளுதல்
பற்றிய  விழிப்புணர்வு

சென்னை=10/03/2022=12=05=am

முகப்பேர்  வேலம்மாள் பள்ளியில்  சமூக ஊடகங்களின் கவனச்சிதறல்களைத் திறம்படக் கையாளுதல்
பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.

முகப்பேர்  வேலம்மாள் பள்ளியில்  நடுநிலைப் பிரிவு மாணவர்கள் பங்கேற்ற சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் கவனச்சிதறல்களைத் திறம்படக் கையாள்வது
எவ்வாறு என்பது பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஒன்று 09.02.22 அன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில்
கல்வியாளர் மற்றும்
தொழில் வழிகாட்டல் ஆலோசகருமான
முனைவர் திரு.ராஜராஜன்
அவர்கள் கலந்து கொண்டு
விழிப்புணர்வுக் கருத்தரங்கினைத் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  சமூக ஊடகங்களின் சாதக பாதகங்களை விளக்கிய சிறப்பு விருந்தினர் அவற்றின் பாதிப்புகளைக் குறைக்கும் வழிமுறைகளைப் பின்வருமாறு பட்டியலிட்டார்;
தேவையற்ற சமூக ஊடகத் தளங்களையும் பயன்பாடுகளையும் உடனடியாகத் தடைசெய்வது ,
 கைபேசி பயன்பாட்டினை  கட்டுப்பாட்டில் வைப்பது,  தேவையற்ற காலங்களில் கைபேசியை அணுக முடியாத இடத்தில் விட்டு விடுவது,
ஒரு சமூக ஊடக அட்டவணையை உருவாக்கி  நேரத்தின்  தன்மை மற்றும் செய்ய வேண்டிய செயல்களை ஆராய்ந்து நினைவூட்டல்களைப் பயன்படுத்துவது.
சமூக ஊடகங்களில்  மாணவர்கள் தமது நேரத்தை இதர வகையில் பயன்பாடுள்ள செயல்களாக  மாற்றுதல்
போன்ற வழிமுறைகளைக் கற்பித்தார்.
இறுதியாக மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 இந்நிகழ்வு தற்போதைய சூழலில்  மாணவர்களுக்கு மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *