லக்கிம்பூர் வன்முறை: ஒரு வாரத்தில் கைது செய்ய உ.பி., அரசுக்கு டிகைட் கெடு விதிப்பு!
உத்தரப் பிரதேசத்தில்
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தால் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதுவரை, கலவரத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது எஸ்யூவி கார் ஏறும் காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விவசாய தலைவர் ரகேஷ் டிகைட் வலியுறுத்தியுள்ளார்.
