வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 12 பேர் பணியிட மாற்றம் கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
11/01/2022
கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 12 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்
அதன்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் பன்னீர்செல்வம் கரூர் வட்டாட்சியராகவும், கரூர் வட்டாட்சியராக இருந்த மோகன்ராஜ் தமிழ்நாடு வாணிபக்கழக கிடங்கு மேலாளராகவும், தமிழ்நாடு வாணிபக்கழக கிடங்கு மேலாளராக இருந்த யசோதா கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராகவும், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் குளித்தலை வட்டாட்சியராகவும் (குளித்தலை வட்டாட்சியராக இருந்த விஜயா விடுப்பில் சென்றுள்ளார்).
குளித்தலை ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் முருகன், கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த ராஜசேகரன் அரவக்குறிச்சி வட்டாட்சியராவும், அரவக்குறிச்சி சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார் கரூர் மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் (பொது), அங்கிருந்த சுரேஷ்குமார், கரூர் கோட்ட கலால் அலுவலராகவும், கரூர் கோட்ட கலால் அலுவலராக இருந்த அமுதா, அரவக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிக்குமார், கரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த செந்தில்குமார் கரூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று (ஜன. 10ம் தேதி) பிறப்பித்துள்ளார்.