வால்பாறை அருகே சத்துணவு கூடத்தில் கிடந்த குட்டி யானையின் எலும்புக்கூடு
29/01/2022
கோவை=9.59.PM
உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடி அமைக்க நகராட்சி அலுவலர்கள் சத்துணவு கூடத்தை திறந்தபோது குட்டி யானையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.
பாள்ளாச்சி வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் பயன்பாட்டில் இல்லாத சத்துணவு கூடத்தில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடி அமைக்க நகராட்சி அலுவலர்கள் சத்துணவு கூடத்தை திறந்தபோது குட்டி யானையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.
சத்துணவு கூட கட்டிடத்தில் பெரிய ஓட்டை இருந்துள்ளது இந்த ஓட்டை வழியாக அரிசி சாப்பிடுவதற்காக உள்ளே சென்ற யானை வெளியே வரமுடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத் திற்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மற்றும் வால்பாறை வனத்துறையினர் யானையின் எலும்புகளை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.