விராலிபட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திண்டுக்கல்=11/03/2022=12=10am
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சுற்றியுள்ள விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதற்கு ஆத்தூர் ராமராஜபுரம் சென்று வந்தனர்.
வத்தலகுண்டு ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோரிடம் வத்தலக்குண்டு பகுதிக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து விராலிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதற்கு அமைச்சர் இ.பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் விசாகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் ஆகியோருக்கு விராலிப்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
விராலிப்பட்டி கோட்டை கருப்பசாமி கோவில் அருகே நெல்கொள்முதல் நிலையத்தை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் மருதை என்ற அன்பு திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் விராலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.