விழுப்புரம் மாவட்டத்தில் 348 வாக்குசாவடிகள் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட அதிகாரி
28/01/2022
விழுப்புரம்=8.05.PM
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 210 உறுப்பினர்களை தேர்வு செய்ய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2,93,000 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 210 உறுப்பினர்களை தேர்வு செய்ய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2,93,000 வாக்காளர்கள் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
முதற்கட்டமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், மாநிலத்தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
தேர்தல் விதிகள் அமலில் வந்துள்ளதால் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்ட்ரோல் ரூமிலிருந்து பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.