விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு!

08/01/2022

ஈரோடு அருகே நடுவானில் பறந்தபோது வானிலை காரணமாக மலைக் கிராமத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.

பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு தம்பதி பயணம் செய்த தனியார் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக திடீரென தரையிறக்கப்பட்டது.

ஈரோடு அருகே நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட மோசமான வானிலையால் கடம்பூர் மலைப் பகுதியில் அவசரமாக திடீரென தரையிறக்கப்பட்டது. இதனைதொடர்த்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரை பத்திரமாக மீட்டனர்.

மருத்துவ சிகிச்சைக்காக கேரளா மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் வானிலை காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *