விவேகானந்தர் பொன்மொழி – மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள்
13/01/2022
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் பொன்மொழிகள் கூறும் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.
கொரோனா காலமாக இருப்பதால் மாணவர்களுக்கு இணையம் வழியாக தேசிய இளைஞர் தினமான விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ,செல்வமீனாள் ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். மாணவர்கள் விவேகானந்தரின் பொன்மொழிகளை ஆர்வத்துடன் கூறியதுடன் ஓவியங்கள் வரைந்தும் அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஓவியம் மற்றும் பொன்மொழிகள் கூறுதல் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , செல்வமீனாள் , முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.