வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு கனமழை அடி தூள் – வானிலை மைய சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த தென்மேற்குப் பருவமழைக்காலம் முடிவுக்கு வரப்போகிறது. வடகிழக்குப் பருவமழைக்காலம் இன்றும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை பல மாவட்டங்களில் நீடித்து வரும் நிலையில் இன்று முதல் 11ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் திருச்சியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா, பந்தலூரில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. சோலையாறு, சென்னை, திருவாடானையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரம், பள்ளிப்பட்டு, ஓசூரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி, மதுரை, தேனியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூர், திருப்பூர், கிருஷ்ணகிரியில் 1 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் , கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 9ஆம் தேதியன்று வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்