வேலம்மாள் பள்ளி மாணவி தனது தனிக் கவிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்..!
பள்ளி மாணவி தனது தனிக் கவிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்..!
மாங்காடு, வேலம்மாள் வித்தியாலயா பள்ளியின்
பதினொன்றாம் ஆம் வகுப்பு மாணவி லக்ஷிதா போகநாதம், ஹம்ரூ பதிப்பகத்தின் மூலமாக சமீபத்தில் தனது கவிதைகளின் தொகுப்பினைத் தனிப் புத்தகமாக ‘A Walk Over Poetry’ என்னும் தலைப்பில் இணையவெளியில் வெளியிட்டார்.
A Walk Over Poetry என்பது 55 கவிதைகள் மற்றும் 15 பழமொழிகளின் தொகுப்பாகும். வெற்றிகரமான கனவு, நதியின் பயணம், எழுதுவதற்கான காரணம், சுய உதவி, இலையுதிர்
காலப் பள்ளத்தாக்கு என அவர் விவரிக்கும் கவிதைகளானது உற்சாகம், சோகம், நினைவலைகள் என்பன போன்ற பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.
கவிஞராக அவரது பரிணாம வளர்ச்சி மற்றும் பயணம் உண்மையில் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வாகும்.
இந்தப் புத்தகம் அவரது ஆர்வம் மற்றும் உறுதியின் உச்சம் என்பது மிகையில்லை. இளம் கவிஞரின் அற்புதமான இந்தச் சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது