வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஏழு இலட்சம் மதிப்பில் சீரமைப்பு மற்றும் தளாவாட பொருட்கள் வழங்கும் விழா
வேலூர் மாநகரம் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு இலட்சம் மதிப்பீட்டில் பென்ச், டெஸ்க் உள்ளிட்ட தளவாட பொருட்களும் விளையாட்டு திடல், நூலக கட்டிடம் ஆகியவை சுமார் ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் சீரமைத்தும் ஆக மொத்தம் ஏழு இலட்சம் மதிப்பீட்டில் வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திதன் முன்னாள் தலைவர் வடிவேலு, கொணவட்டம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குருவாயூர் சம்பத், ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி பாராட்டினார் .
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முப்பெறும் விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி க.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்டக்கல்வி அலுவலர் திரு.த.சம்பத்து முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமையாசிரியர் திரு.ஆர்.தாமோதரன் வரவேற்று பேசினார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் திரு.வடிவேல், கொணவட்டம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.குருவாயூர் சம்பத், வேலூர் மிட்டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் திரு.பெப்சி சீனுவாசன், திரு.கணேஷ்காந்தி, திரு.சுரேஷ், திரு.சரவணன், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் திரு.கே.பாண்டியன், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் திரு.செ.நா.ஜனார்த்தனன், பள்ளி உதவித்தலைமையாசிரியர் திரு.வெங்கடேசன், திரு.வி.எம்.ராஜா முதுகலை ஆசிரியர் திரு.கே.சங்கர் ஆகியோர் வ.உ.சிதம்பரனார் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து வாழ்த்தி பேசினர்.
பள்ளிக்கு இரண்டு லட்சத்து எட்டாயிரம் மதிப்பீடில் புதிய பென்ஞ் மற்றும் டெஸ்குகளையும், ரூபாய் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் சீரமைக்கவும் மற்றும் பள்ளியின் நூலக கட்டிடம் சார்ந்த தளாவாட பொருட்கள் என ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ஆக மொத்தம் சுமார் 7 இலட்சத்தில் பள்ளி வளர்ச்சி பணிகளை பள்ளிக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் திரு.வடிவேல், கொணவட்டம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.குருவாயூர் சம்பத், ஆகியோர் ஒப்படைத்தனர். இதனை பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் ஆர்.தாமோதரன் பெற்றுக்கொண்டார்.
முடிவில் உதவித்தலைமையாசிரியர் எம்.எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு இலட்சம் மதிப்பீட்டில் பென்ச் மற்றும் டெஸ்க் தளவாட பொருட்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி அவர்களின் தலைமையில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் திரு.வடிவேல், கொணவட்டம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.குருவாயூர் சம்பத், ஆகியோர் வழங்கிய போது எடுத்தப்படம் உடன் மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத்து பள்ளி தலைமையாசிரியர் ஆர்.தாமேதரன், செ.நா.ஜனார்த்தனன், ஆடிடர் பாண்டியன், பெப்சிசீனிவாசன் உள்ளிட்டோர் .