வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

28/01/2022

வேலூர்=7.39.PM

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்விவரம் வருமாறு:-

வேலூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்துக்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) அஜய்சீனிவாசன் (செல்போன் எண்-98942 40948), 2-வது மண்டலத்துக்கு கால்நடைபராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் (94450 01131), 3-வது மண்டலத்துக்கு வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா (94450 00417), 4-வது மண்டலத்துக்கு வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் (80720 05079) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, பேரணாம்பட்டு நகராட்சிக்கு சிறப்பு துணை கலெக்டர் (முத்திரை) ராமகிருஷ்ணன் (88705 05566), குடியாத்தம் நகராட்சிக்கு உதவி கலெக்டர் (கலால்) வெங்கட்ராமன் (94448 38637), பென்னாத்தூர் பேரூராட்சிக்கு கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வளர்ச்சி) புருஷோத்குமார் (74026 06575), பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செந்தில்வேல் (98424 67215), ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் (99523 14993), திருவலம் பேரூராட்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பேபிஇந்திரா (94454 77828) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 18004254464-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *