வேலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம்
வேலூர்=10/03/2022=12=26am
வேலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம்
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வது, எடை குறைப்பு உள்ளிட்ட சுரண்டலை தடுக்கலாம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறினார்.
வேலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அம்முகுட்டி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கி நுகர்வோர் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டும் பேசியதாவது:-
பொதுமக்கள் வாங்கும் அனைத்து பொருட்களிலும் பல்வேறு சுரண்டல்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களின் உரிமைகள் மற்றும் சுரண்டல்கள் குறித்து முறையீடு செய்வதற்கு ஏற்ப நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. நாம் வாங்கும் பொருட்களின் தரம் சரியில்லை என்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எடை குறைப்பு, தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருப்பதை விட விலையை உயர்த்தி விற்பனை செய்வது, பொருட்களில் கலப்படம் செய்வது என்று பல்வேறு தந்திரங்களை வியாபாரிகள் கையாண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சுரண்டலை தடுக்கலாம். அனைத்து பொருட்களின் தரமும் ஆய்வு செய்து முத்திரை வழங்கப்படுகிறது. முத்திரையில் குறிப்பிட்டிருக்கும் எண்களை ஆராய்ந்து பார்த்து அதன் தரத்தை அறியலாம்.
பல்வேறு துறைகளில் சேவை சரியாக இல்லையென்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏமாற்றப்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் வியாபார நிறுவனங்களில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது ரேஷன் கடைகளில் ஏதாவது முறைகேடு நடந்தாலோ, ரேஷன் அரிசி கடத்தப்பட்டாலோ 9952314993, 9445000184 என்ற செல்போன் எண்களில் புகார் அளிக்கலாம். அல்லது அந்த எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.